fbpx
Connect with us

Cinemapettai

தெறி 58 நாளில் செய்த சாதனையை மெர்சல் 10 நாளில் செய்துவிட்டது.!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

News | செய்திகள்

தெறி 58 நாளில் செய்த சாதனையை மெர்சல் 10 நாளில் செய்துவிட்டது.!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கவும், படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்பப் பெறவும் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பியதால் படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

mersal

விஜய் நடித்துள்ள மெர்சல்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

‘மெர்சல்’ படத்திற்கு எதிரான பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன.

குறிப்பாக, மத்திய அரசின் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

mersal vijay

mersal vijay

விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியான எல்லா இடங்களிலும் நல்ல வசூல் ஈட்டி வரும் நிலையில், நெல்லையில் ஒரு பிரபல திரையரங்கம் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மெர்சல் திரைப்படம் பல பிரச்னைகளைத் தாண்டி வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களின் செம ரெஸ்பான்ஸோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

mersal

இரண்டாவது வாரத்திலேயே பல திரைப்படங்களின் கலெக்‌ஷன் ஹிஸ்டரியை முந்திச் சாதனை படைத்து வரும் நிலையில் நெல்லை ராம் முத்துராம் திரையரங்க நிர்வாகி ட்வீட் செய்துள்ளார்.

விஜய்யின் தெறி 58 நாளில் செய்த சாதனையை அட்லீ இயக்கத்தில்  விஜய்யின் மெர்சல் 10 நாளில் செய்துவிட்டது – கொண்டாடத்திற்கு தயாரான ரசிகர்கள்.

மேலும், ‘மெர்சல்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று காலை நடைபெறவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top