theri-vijayதமிழ் சினிமாவின் தற்போதைய கௌரவம் என்பது ரூ 100 கோடி கிளப் தான். இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, லாரன்ஸ் ஆகியோர் இந்த ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளனர்.இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த தெறி 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் வந்துவிட்டதாக தயாரிப்பாளரே கூறிவிட்டார்.

அப்படியிருக்க தென்னிந்தியாவின் முன்னணி தளம் ஒன்று உண்மையில் ரூ 100 கோடி வசூல் இன்னும் வரவில்லை என கூறியுள்ளது.இது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தெறி படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

வசூல் நிலவரம் கேட்கும் அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் பதில் தான் வருகின்றது, அப்படியிருக்க ஏன் இதுப்போன்ற செய்திகளையெல்லாம் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.