சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்க் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.