ajith

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

அஜித் தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

Ajith

தீனா முதலில் இந்தப் படத்துக்கு இயக்குநராக ஒப்பந்தமானவர் வேறு ஒருவர். ஆனால், படப்பிடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கும் படத் தயாரிப்பாளருக்கும் திடீரென முட்டிக்கொண்டது.

அதிகம் படித்தவை:  அஜித் - ஷாலினிக்கு குவியும் வாழ்த்து; கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

புது இயக்குநரைத் தேடவேண்டிய நிர்பந்தம். ‘எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டென்ட்னு ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தாரே… அவரை உடனே அழைச்சுட்டு வாங்க’ என அஜித் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அந்த ஒருவர்தான்… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

aji

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித்.இவருக்கு ‘தல’ எனும் பெயர் எப்படி வந்தது என்றால் இயக்குனர் முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் அஜீத்குமார் நடித்திருந்தார் .இந்த படம் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அஜீத்குமாரின் பெயர் தீனா.அவர் அந்த படத்தில் ரவுடியாக நடித்திருப்பார்.அதிகமாக அந்த படத்தில் அவரை ‘தல தல ‘ என்று தான் அழைப்பார்கள்.இந்த படத்தில் இருந்து தான் அஜித்துக்கு தல எனும் பெயர் வந்தது .இதனால் தான் நடிகர் அஜித்குமாரை தமிழகமே ‘தல ‘ என்று அழைத்து வருகிறது .

அதிகம் படித்தவை:  ரஜினி கமல் கூட கைகொடுக்கவில்லை ஆனால், அஜித் மட்டும் பிரபல இயக்குனர் உருக்கம்.!
ajith

இந்த பட்டத்தை அஜித்துக்கு வைத்தவர் இயக்குனர் முருகதாஸ் இல்லையாம். அந்த படத்தில் உதவி இயக்குனராய் பணியாற்றிய மோகன் என்பவர் தான். அஜித்துக்கு இப்படி ஒரு பட்டத்தை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த படத்தில் அவரை தல என்று அழைத்தனர்.இப்போது ‘தல’ என்றாலே தெரியாதவர்கள் யாருமே இல்லை.