ரஜினியின் வாரிசால் பெரும் சிக்கலில் சிவகார்த்திகேயன்.. துரத்தி துரத்தி அடிக்கும் ஏழரை

நடிகர் சிவகார்த்திகேயன் மீது அண்மையில் இசையமைப்பாளர் டி.இமான் கூறிய குற்றச்சாட்டுக்கு பின்னர் பல கேள்விகளுக்கு அவர் ஆளாகியுள்ளார். மேலும் தற்போது வரை சிவகார்த்திகேயன் எந்த பதிலும் இதுகுறித்து கூறாததால், இமானின் முன்னாள் மனைவி மோனிகாவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளான சிவகார்த்திகேயன் தற்போது தன் மீது விழுந்த கறையை துடைக்க அயலான் படத்தின் ரிலீஸ் தான் ஒரே வழி என கங்கணம் கட்டி வருகிறார். ஆனால் தற்போது அப்படம் ரிலீஸாவதில் பல சிக்கல் வருவதால் சிவகார்த்திகேயன் மீண்டும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார். இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் ஏலியன் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: சிவகார்த்திகேயன் இனி எந்திரிக்கவே கூடாது.. தனுஷ் போட்ட புதுக்கணக்கு

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் முழுமையாக முடியவில்லை என கூறி இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. அதன்படி இப்படத்தின் வேலைகளும் முடிந்த நிலையில், தற்போது வேறொரு புது பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் ஸலாம் திரைப்படமும், இயக்குனர் சுந்தர்.சியின் அரண்மனை 4 படமும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்த இரண்டு படங்களுடன், அயலான் படத்தையும் சேர்த்து உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தான் திரையரங்கில் ரிலீஸ் செய்யவுள்ளது.

Also Read:  போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

ஆனால் லால் சலாம், அரண்மனை 4 படங்களை பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய எந்த ஒரு சிக்கலும் தற்போது வரை வராத நிலையில், சிவகார்த்திகேயனின்அயலான் படத்தை ரிலீஸ் செய்ய பெரிய சிக்கல் வந்துள்ளது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தற்போது போதுமான பணம் இல்லையாம்.

100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வி.எப்.எக்ஸ் காட்சிகளால் கூடுதல் பட்ஜெட்டை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாம். இதனால் இப்படத்தை பொங்கலன்று ரிலீஸ் செய்ய பணம் இல்லாமல் படக்குழு தவித்து வருகிறதாம். பொதுவாக ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை பொருத்தவரை படம் ரிலீஸான பின்புதான் பணத்தை கொடுப்பார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென தெரியாமல் அல்லல்பட்டு வருகிறாராம்.

Also Read: தீபாவளி அதுவுமா சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.. என்ன நடந்தாலும் நா சந்தோசமா இருப்பேன

- Advertisement -spot_img

Trending News