Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெரிய பட்டியலே இருக்கிறது… நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி

தமிழ் சினிமா பிரபலங்களுக்கு சுசி லீக்ஸை இன்றும் மறக்க முடியாது. பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து நடிகர் மற்றும் நடிகைகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகமாக வெளியாகியது. இதனால், கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இரண்டே நாளில் அந்த கணக்கு முடக்கப்பட்டு, சுசியும் தனக்கு எதுவுமே தெரியாது என சமாளித்து விட்டார். இதை தொடர்ந்து, இந்த வருடம் புதிய சர்ச்சைக்குள்ளாகி இருப்பது தெலுங்கு சினிமா. துணை நடிகை ஸ்ரீ ரெட்டி, தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என தவறாக நடந்து கொண்ட முக்கியஸ்தர்களை அடையாளம் காட்டுவேன் என சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதற்கு ஸ்ரீ லீக்ஸ் என பெயரையும் அவரே வைத்தார்.
சுசி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸும் சில நாட்களில் காலாவதியாகி விடும் எண்ணியவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ ரெட்டி சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அந்தரங்க பேச்சுகள் ஸ்ரீ லீக்ஸில் வெளியாகியது. இதில் உச்சகட்டம், தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய குடும்பமும், டாப் ஸ்டார் ராணாவின் தம்பி அபிராமின்அந்தரங்க புகைப்படங்களுடன், ஆபாச சாட்களும் வெளியாகியது. இதனால், தெலுங்கு பிரபலங்களே சற்று ஆடித்தான் போனார்கள். இதை தொடர்ந்து, தனக்கு சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என அரை நிர்வாண போராட்டம் ஸ்ரீ ரெட்டி செய்தது எல்லாம் பகீர் ரகம். இதுகுறித்து தனியாக தெலுங்கு நடிகர் சங்கம் விசாரணையே நடத்தி வருகிறது. மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கிறது.
இந்தசூழலில் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக தெலுங்கு தயாரிப்பாளர் கிஷான் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீலீக்ஸ் புகழ் நடிகை ஸ்ரீரெட்டி புதிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘மார்க்கெட் இழந்த நடிகைகள் அமெரிக்கா சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். நடிகைகளுக்கு இருக்கும் புகழை வைத்து அவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வித்தியாசப்படும்.
அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் விவரம் என்னிடம் உள்ளது. பிரபல நடிகைகள், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் அடக்கம். பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை நான் வெளியிட்டால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். பாலியல் தொழிலுக்காக என்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை’ என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
