fbpx
Connect with us

Cinemapettai

விஜய் படத்தை நம்பி பழைய படங்களை தூசி தட்டும் தேனாண்டாள்.. முடியை கட்டி மலையை இழுக்கும் கதைதான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்தை நம்பி பழைய படங்களை தூசி தட்டும் தேனாண்டாள்.. முடியை கட்டி மலையை இழுக்கும் கதைதான்

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தளபதி 65 படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி66 படத்திற்கான செய்திகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

தளபதி66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தான் தயாரிக்க உள்ளார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தளபதி66 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.

தளபதி விஜய்யின் தளபதி66 படத்தின் பட்ஜெட் 200 கோடியை தாண்டும் என்கிறது கோலிவுட் வட்டாரம். தளபதி66 படத்திற்கு வாங்கும் கடன் உடன் சேர்த்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாதியில் நிறுத்தப்பட்ட படங்கள் அனைத்துமே தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மெர்சல் படத்திற்கு பிறகு தேனாண்டாள் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சங்கமித்ரா படத்தை தயாரிக்க இருந்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்க இருந்த நான் ருத்ரன் படம், எஸ் ஜே சூர்யாவின் இறவாக்காலம் போன்ற படங்களை ஒரே நேரத்தில் தயாரித்தனர்.

இதனால் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி அனைத்து படங்களும் பாதியில் நிற்கிறது. இந்நிலையில் தளபதி66 படத்திற்கு வாங்கும் கடன் சுமை உடன் சேர்த்து இந்த படங்களையும் முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளாராம் முரளி.

ஏற்கனவே மெர்சல் படத்தில் சம்பாதித்த பணம் அனைத்துமே கடன் கட்டவே சரியாகி விட்டது. இந்நிலையில் விவரமாக பிழைப்பதை விட்டுவிட்டு மீண்டும் பேராசை பெருநஷ்டம் கதையாக ஆகிவிடும் போல என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் தந்தை ராமநாராயணன் சிறு பட்ஜெட்டில் பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது முரளி எடுத்திருக்கும் முயற்சி முடியை கட்டி மலையை இழுப்பது போல தான் என கிண்டல் அடிக்கிறார்கள்.

Continue Reading
To Top