Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடிவேல் பாலாஜி வீட்டிற்கு வந்த திருடன் செய்த செயல்.. அரங்கத்தையே நெகிழ வைத்த வீடியோ
சில தினங்களுக்கு முன்பு காமெடி நடிகராக பலரை சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய இழப்பு திரையுலக பிரபலங்களை கண்ணில் மூழ்கடித்தது.
இவர் கடைசியாக விஜய் டிவியில் “மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
எனவே, இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விஜய் டிவியில் “மிஸ் யூ வடிவேல் பாலாஜி” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அவருடன் பணியாற்றி பல பிரபலங்கள் பங்கேற்று வடிவேல் பாலாஜியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அதில் குறிப்பாக பட்டிமன்ற பேச்சாளரும், ஸ்பாட் காமெடி ஆர்டிஸ்ட் ஆன பழனி, வடிவேல் பாலாஜி வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்தார்.
“ஒரு தடவை பாலாஜியின் வீட்டில் திருடர்கள் திருட வந்த போது, அது பாலாஜியின் வீடு என தெரிந்ததும், தெரியாம வந்துட்டோம் அண்ணா! என்று மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்து விட்டு செய்துள்ளனராம்” என்று கூறி அரங்கத்தையே நெகிழ வைத்தார்.

vadivel-balaji-passes-away-death
இவ்வாறு பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் வடிவேல் பாலாஜிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முழு வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்
