கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில்  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி  நல்ல  ஓப்பனிங் அமைந்தது.

theeran karthi

இப்படத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் வகையில், காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இது, சட்டப்படி குற்றமாகும் என்று சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கூறினர்.  படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து அந்த வார்த்தையையும், காட்சியையும் நீக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக அப்படக் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி …

‘‘இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை.

Theeran Adhigaran Ondru

இருப்பினும் ஒரு சில மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால் அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம், கூடவே எங்கள் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்புகள் ஆகியவற்றிலிருந்து ‘குற்றப்பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தகம் இடம் பெரும்  காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.