Theeran Adhigaram Ondru Sucess Meet

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் கடந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வினோத் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ராகுல் ப்ரீத் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள், காவல் துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த லிஸ்டில் நம் பிரம்மாணட இயக்குனர் ஷங்கரும், நடிகை கௌதமியும் இணைந்துள்ளனர்.

கௌதமி

கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என்று
பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக நடிகை, நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளார். இவரும் ட்விட்டரில் உள்ளார் என்பதே பலருக்கு தெரியாமல் தான் போய் விட்டது. சமூக நலன், தேசிய உடன்பாடு, பொது சேவை போன்ற விஷயங்களை மட்டுமே தன் ட்விட்டரில் பேசுபவர் கௌதமி.

மெர்சல் படம் வந்தபொழுது மருத்தவ துறை பற்றிய டீவீட்டை பதிவு செய்தார், பின்னர் சினிமா சம்பந்தமாக தீரன் படம் பற்றி ட்வீட் போட்டுள்ளார் …

அதிகம் படித்தவை:  சற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்

“தீரன் திரைப் படம். சிறந்த சமர்ப்பணம் டு தைரியம், மரியாதை, நேர்மை, தமிழ் நாடு காவல் துறை மற்றும் ஜாங்கிட் அவர்களுக்கு. வாழ்த்துக்கள் கார்த்தி, வினோத், எஸ். ஆர். பிரபு அவர்களுக்கு.”

இவரின் டீவீட்டுக்கு கார்த்தி, ராகுல் ப்ரீத், ட்ரீம் வாரியர்ஸ் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர்

Rajini-Shankar-2Point0
2 Point O

இயக்குனர் ஷங்கர் தற்பொழுது ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும்போதிலும் ஷங்கர் தியேட்டர்களில் வெளியாகும் மற்ற புது படங்களை பார்க்க தவறுவதில்லை. தன் ட்விட்டரில் இதற்கு முன்னரே பவர் பாண்டி, பாகுபலி 2, துப்பறிவாளன்  படங்களை பற்றி தன் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அதிகம் படித்தவை:  காப்பி அடிப்பதை எளிதாக்கும் கூகுள் குரோம்!

இப்போது இயக்குனர் ஷங்கரும் ‘தீரன்’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளர். ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தீரன் குறித்து பதிவு செய்த ட்வீட் ..

karthi in theeran

“தீரன் அதிகாரம் ஒன்று, அசத்தலான போலீஸ் படம். சீட் நுனியில் உட்கார்ந்து, நகம் கடிக்கும் அளவிற்கு உள்ளது படம் . அருமையான உழைப்பு மற்றும் நுண்ணிய தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் வினோத். அருமையாக வேலை செய்துள்ளார் கார்த்தி, ஜிப்ரான், ஒளிப்பதிவு மற்றும் பாடகக்குழுவின் அனைவரும்.” என்றார்.

இந்த டீவீட்டை பார்த்து விட்டு நடிகர் கார்த்தி, நாயகி ராகுல் ப்ரீத், இசையமைப்பாளர் ஜிப்ரான் தங்கள் நன்றியை இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தெரிவித்தனர்.