fbpx
Connect with us

சென்னை பாக்ஸ் ஆபீசை திணறவைக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வசூல் சாதனை.!

News | செய்திகள்

சென்னை பாக்ஸ் ஆபீசை திணறவைக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வசூல் சாதனை.!

தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. பெரும்பாலான கதைகள் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் தான் நிறைந்திருக்கும்.

karthi in theeran

ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, குடும்பத்தினரைக் கொன்றவன் இப்படிப்பட்டவர்களைப் பழி வாங்கும் கதையாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, இந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு ஏமாற்றுக்காரனை நாயகனாக வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் வினோத், இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் தியாகத்தை நாமும் சல்யூட் அடித்துக் கொண்டாடும்படி மனதில் பதிய வைத்திருக்கிறார்.

theeran karthi

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இரண்டாவது வாரத்திலும் இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இந்த படம் பத்தே நாட்களில் ரூ.4 கோடி வசூலை தாண்டிவிட்டது. அதாவது நவம்பர் 17 முதல் 26 வரையிலான பத்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.4,31,01,254 வசூல் செய்துள்ளது.

karthik

இரண்டாவது வாரத்திலும் சூப்பர் வசூல் செய்துள்ளதால் கார்த்திக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது.

மேலும் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 20 திரையரங்குகளில் 237 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 1,23,74,293 வசூல் செய்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top