சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் நடிப்பில் வெளிவந்துள்ளது தீரன் அதிகாரம் ஒன்று. படம் ரிலீஸ் ஆகி அணைத்து சென்டர்களில் மாஸ் ஹிட் ஆகியுள்ளது.

Karthi as Theeran Thinagaran

இந்நிலையில் தன் தம்பி கார்த்தியின் படம் பற்றி அண்ணன் சூர்யா என்ன சொன்னார் என்று பார்ப்போம்…

‘தீரன்’ ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10 வருடமாக கண்டுபிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.

Suriya SR Jangid Karthi

இயக்குனர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்கவேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதேபோல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள்.’’

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பார்த்த தமிழக டிஜிபி

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தீரன் தினகரனும், துறை சிங்கமும் இணைந்து நடித்தார்கள் என்றால் எப்படி இருக்கும்?