theeran karthi

கார்த்தி நடிப்பில் போலீஸ் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

karthi as THEERAN THINAGARAN

தீரன் அதிகாரம் ஒன்று

1995லிருந்து 2005வரை நடைபெற்ற சில குற்றச் சம்பவங்களின் பின்னணியை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர். ஹைவேயில் நடக்கும் கொலை, கொள்ளையுடன் படம் ஆரம்பம் ஆகிறது.

போலீஸ் ட்ரைனிங்கில் கார்த்தி, பின் ஹீரோயினுடன் காதல், உடனே கல்யாணம். நேர்மையாக இருப்பதால் இடமாற்றம் என்று கதை நகர்கிறது. தீரன் தினகரானாக கார்த்தி, அவர் காதல் மனையிவாக ராகுல் ப்ரீத். ஒருபுறம் ரொமான்ஸ் மறுபுறம் கொள்ளையர்கள் பற்றிய தகவல் வேட்டை என்று இரண்டையும் அழகாக எடுத்துள்ளார் இயக்குனர் வினோத்.

theeran-adhigaram-ondru

ஒரு துவக்கப்புள்ளியில் ஆரம்பித்து, படி படியாக போலீஸ் எவ்வாறு திருடனை நெருங்குகிறது என்பதை மிக துல்லியமாக படத்தில் காட்டியுள்ளனர். அநேகமாக பஞ்ச் டயலாக் பேசாத போலீஸ் இந்தப்படத்தில் தான் நாம் பார்க்கமுடியும். தன வேலையே திறன் படவே செய்தாலும், உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்கும் நிலைமை தான் போலீஸுடையது என்று சுட்டிக்காட்டியுள்ளனர் இப்படத்தில்.

என்ன தான் நம்ப ஊரில் நம்ப போலீஸ் கெத்து என்றாலும், பிற மாநிலத்தில் தகவல் சேகரிக்க சென்றால், இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டுமா என்று படம் பார்க்கும் நம்மையே ஒரு சில நொடிகள் பீல் பண்ண வைத்து விடுகிறார்கள்.  பொதுமக்களுக்கு தீமை நடக்கும் பொழுது கிடைக்காத அரசியல் அழுத்தம் , பணம் உள்ளவனுக்கு பிரச்சனை என்றால் போலீசுக்கு வந்துவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

இந்த படத்தை பொறுத்தவரை வழிப்பறி கொள்ளையர்கள் என்று சொல்லி முடித்து விடமால். அவர்கள் யார் ? பின்னணி என்ன? குற்றப்பரம்பரை பற்றிய செய்திகள் என்று அசத்தி இருக்கும் இயக்குனருக்கு கட்டாயம் நம் பாராட்டுகளை சொல்லியே ஆகவேண்டும். மூன்று அல்லது நான்கு படங்களில் எடுக்கக்கூடிய விஷயத்தை இந்த ஒரு படத்தில் புகுத்தியுள்ளார்.

படத்தின் பிளஸ்

இயக்குனர் வினோத், கார்த்தி, வில்லனான அபிமன்யு சிங், கார்த்தியின் அசிஸ்டண்டாக போஸ் வெங்கட், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள், சத்யன் சூரியனின் கேமரா.

படத்தின் மைனஸ்

காதல் காட்சிகள், பாடல்கள், படத்தின் நீளம் (157 நிமிடங்கள்), சில இடங்களில் ஜிப்ரானின் ஆர்ப்பாட்டமான பின்னணி இசை.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் அதிகாரம் இரண்டு (பார்ட் 2) என்று ரிலீஸ் செய்யும் அளவுக்கு அவ்வளவு தகவல்களை இயக்குனர் புகுத்தியுள்ளார். படத்தின் நீளத்தை சிறிது குறைத்திருக்கலாம். சில காதல் காட்சிகள், மற்றும் பாடல்கள் இல்லமால் எடுத்திருந்தால் குருதிப்புனல் 2 என்று சொல்லும் அளவுக்கு மிக யதார்த்தமாக இருந்து இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும் பொழுது சில மைனஸ் கண்ணுக்கு தெரியாமல் போகும் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு.

சினிமாபேட்டை ரேட்டிங்  3.25/5