Connect with us
Cinemapettai

Cinemapettai

master-vijay-cinempaettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டர் திறந்தவுடன் எங்களுக்கு மாஸ்டர் வேண்டாம், இந்த படம் தான் வேணும்.. அடம்பிடிக்கும் தியேட்டர்காரர்கள்!

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அவர்களது தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் அவர்கள் பெரிதும் நம்பியிருந்த முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக OTT தளத்துக்கு சென்று கொண்டிருப்பதால் மேலும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில்தான் அரசாங்கம் வருகிற 15-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டரை திறந்து கொள்ளலாம் என்ற அனுமதி அறிவிப்பை வெளியிட உள்ளது.

இதனால் தியேட்டர்காரர்கள் சுறுசுறுப்பாக ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களாக பார்த்து புக் செய்து வருகின்றனர்.

ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், இதுவரை விஜய்யின் மாஸ்டர் படம் தான் வேண்டும் என அடம் பிடித்த தியேட்டர்காரர்கள் தற்போது மாஸ்டர் வேண்டாம் என்று கூறுகிறார்களாம்.

அதற்கு காரணம், சமீபத்தில் மிக வக்கிரமாக இணையதளங்களில் வைரலான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படம் தான்.

இரண்டாம் குத்து படம் தான் எங்களுக்கு வேண்டும் என தியேட்டர்காரர்கள் அடம் பிடிக்கிறார்களாம். ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மிகப்பெரிய வசூலை ஈட்டிய நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
To Top