Tamil Nadu | தமிழ் நாடு
புதிய விதிமுறைகளுடன் திறக்கப்படும் திரையரங்குகள்.. பார்க்கிங் காசு, பாப்கான் காசு வாங்காம விடமாட்டாங்க போல!
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் திரைத்துறை முழுவதும் முடங்கியுள்ளதால் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேலான சினிமா வர்த்தகம் முடங்கி உள்ளது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தபட்டு வரும் நிலையில் தியேட்டர்களுக்கும் ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என அரசிடம் முறையிட்டுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இல்லையென்றாலும் குறைந்தது இரண்டு காட்சிகள் ஆவது போடுமளவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் கேளிக்கை வரி தியேட்டர்கள் மீதான வரி என அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே தியேட்டர்களில் இனிமேல் ஒவ்வொரு இருக்கைகளுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டும் எனவும், படம் பார்க்க வருபவர்களுக்கு சானிடைசர், மாஸ்க் போன்றவற்றை தியேட்டர் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இனி தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் மற்றும் பாப்கார்ன் போன்ற உணவு பொருட்களின் கட்டணம் ஆகியவை இருமடங்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் இனி தியேட்டருக்கு செல்பவர்கள் சொத்தை எழுதி வைத்துவிட்டு தான் வர வேண்டும் போல.
கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்கள் பெரும்பாலும் இனி இயங்காது எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே செயல்பட உள்ளது. ஏற்கனவே மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கொள்ளையடிக்கின்றன என்ற கருத்துக்கள் பரவலாக உள்ளன.
இனி மக்கள் தியேட்டருக்கு வருவது சந்தேகம்தான்.
