fbpx
Connect with us

திரையரங்குகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு.. இதுக்கு OTT தளம் பரவ இல்ல போல!

India | இந்தியா

திரையரங்குகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு.. இதுக்கு OTT தளம் பரவ இல்ல போல!

கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பாதிப்பினால் மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திறக்கப்படவுள்ளது.

இந்த சூழலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு முன்பே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது,

  • திரையரங்குக்கு வருபவர்கள் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
  • மேலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்தபடி திரைப்படங்களை கண்டுகளிக்க வேண்டும்.
  • திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களும், திரைப்படங்களை பார்வையிட வருபவர்களும் கண்டிப்பாக 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • தினமும் திரையரங்கில் நுழையும் மக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • மேலும் திரையரங்கில் வரிசையாக நிற்கும் போதும், தின்பண்டம் வாங்கும்போதும் துமக்கள் தனிமனித இடைவெளியுடன் வரிசையில் வரும் வகையில் ஏதேனும் ஒரு குறியீட்டை அமைக்க வேண்டும்.
  • அதேபோல் திரைப்படத்தின் இடைவெளியில் பொதுமக்கள் வெளியே வருவதை திரையரங்கு ஊக்குவிக்கக் கூடாது.
  • மேலும் ஒவ்வொரு திரைப்பட காட்சிக்கும் இடையே போதுமான அளவு கால இடைவெளியை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் நலன் கருதி, விரைவில் திறக்கப்படும் திரையரங்கிற்கு பல்வேறு நெறிமுறை அடங்கிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எனவே இன்னும் சில நாட்களில் திறக்கப்போகும் திரையரங்கில் பாதுகாப்பான முறையில் திரைப்படங்களை பொதுமக்கள் கண்டு களிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அதேபோல் ரசிகர்களும், இந்த வருடம் தீபாவளி அன்று திரையரங்கில் திரைப்படம் பார்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கின்றனர்.

theatre

theatre

Continue Reading
To Top