Connect with us
Cinemapettai

Cinemapettai

theater

Tamil Nadu | தமிழ் நாடு

தியேட்டர்களை திறப்பது எப்போது.? தீவிரம் காட்டும் மத்திய அரசு.. தமிழ்நாடு திரைப்பட சங்கங்களுக்கு ஆப்பு

சினிமா படப்பிடிப்பு தொடங்கினாலும், திரையரங்குகள் மூடப்பட்டு தான் உள்ளது. இதனை உடனடியாக திறப்பதற்கான முழு முயற்சியில் சினிமா துறையினர் இறங்கியுள்ளனர்.

இதற்காக மத்திய அரசு வரும் செப்டம்பர் 8ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்த உள்ளனர். ஆனால் தென்னிந்திய திரையுலகத்திற்கு எந்த ஒரு அழைப்புகளும் வரவில்லை என்பதால் பெரும் சோகத்தில் உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு பி.வி.ஆர் சினிமாஸ்க்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக் கேட்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

கிட்டதட்ட வருடத்திற்கு 500 படங்களுக்கு மேல் வெளியிடும் தமிழ் திரைப்பட வர்த்தகத்தை முற்றிலும் ஒதுக்கி இருப்பது மத்திய அரசுக்கு நல்லது அல்ல என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

மற்றொருபுரம் கொரோனாவின் பாதிப்பினால் கிட்டத்தட்ட 5 மாதங்கள் மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் திறந்தாலே போதும் என்ற சூழ்நிலையில் திரைப்பட சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளனர். விரைவில் தியேட்டர்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எலிகளின் அட்டகாசத்தால் தியேட்டரில் அமரும் சீட்டுகள் கிழிக்கப்பட்டிருந்தன, அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் ஓடாததால் மூடும் அபாயம் சூழ்நிலைக்கு பல தியேட்டர்கள் தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 20க்குள் தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
To Top