Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா இனி OTT ஹீரோதான்! தியேட்டரை கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் சூர்யா. சமீபகாலமாக அவரது படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இருந்தாலும் சூர்யாவை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தியேட்டர்கள் திடீரென இழுத்து மூடப்பட்டது.
அப்போது சரியாக சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் என்ற படம் தயாராகி இருந்தது. ஆனால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் அந்த படத்தை நேரடியாக OTT தளங்களில் வெளியிட ஆர்வம் காட்டினார் சூர்யா.
தியேட்டர் உரிமையாளர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்து அந்த படத்தை OTTயில் ரிலீஸ் செய்தனர். படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் தியேட்டர்காரர்களுக்கு சூர்யா குடும்பத்தினருக்கும் இடையே சிறிது மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது.
இதனால் சூர்யாவின் படங்களை இனி மேல் நேரடியாக ஒரு OTT தளங்களிலேயே வெளியிட்டு கொள்ளட்டும் என அதிரடியாக அறிவித்தனர். இந்நிலையில் அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் சூரரைப்போற்று.
இந்த படத்தை தியேட்டரில் கொண்டுவர சூர்யா பெருமளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில் தியேட்டர் பற்றிய பேட்டியில் கூட திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் பன்னீர்செல்வம் போன்றோர் சூர்யா படத்தை திரையிடுவதற்கு மொத்த தியேட்டர் உரிமையாளர்களும் ஒரு மீட்டிங் போட்டுத்தான் முடிவு வேண்டும் என்கிறார்கள்.
சூர்யாவை மன்னிப்பு கேட்க வைக்கவே இந்த மாதிரி ஈடுபடுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இருந்தாலும் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகாமல் OTTயில் வெளியானால் ரசிகர்களுக்கு திருப்தி இருக்காது என்பது மட்டும் உறுதி.
