fbpx
Connect with us

Cinemapettai

தியேட்டர் உரிமையாளர்கள் கொடுக்கும் குடைச்சல்.. அவசரப்பட்டு அவஸ்தைப்படும் அனுஷ்கா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டர் உரிமையாளர்கள் கொடுக்கும் குடைச்சல்.. அவசரப்பட்டு அவஸ்தைப்படும் அனுஷ்கா

கொரானா பாதிப்பு பெரிய அளவில் தாக்கம் இருந்தாலும் வெளிநாடுகளில் ஏற்பட்டதைப் போல இழப்புகள் இந்தியாவில் இல்லை. இதனால் ஆங்காங்கே ஒரு சில மாநிலங்கள் தங்களது ஊரடங்கு உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் மக்களும் கொரானாவுடன் வாழ பழகி விட்டார்கள் போல. முன்னாடி இருந்த பயம் தற்போது சுத்தமாக இல்லை. இப்போதும் கூட்டம் கூட்டமாக மக்களை அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் காணமுடிகிறது.

தியேட்டர்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் இழுத்து மூடப்பட்ட நிலையில் ஒரு சில படங்கள் OTT தளத்திற்கு விற்கப்பட்டன. இதனால் தியேட்டர்காரர்களுக்கு கதி கலங்கியது. முன்னணி நடிகர்களின் படங்களையும் இதுபோன்று விற்று விடுவார்களோ என பயந்து கொண்டே இருந்தனர்.

கதாநாயகியை மையப்படுத்தி வெளியாகும் படங்களில் அனுஷ்காவின் படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இருக்கும். அதே அளவுக்கு வசூலிலும் கெத்து காட்டும். அப்படி அனுஷ்கா மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் நிசப்தம் படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்க வேண்டாம் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

தியேட்டர்காரர்கள் கூறுவதாவது, விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர். அதனால் அவசரப்பட்டு போட்டி தளங்களுக்கு பெரிய படங்களை விற்க வேண்டாம் என நடிகர் நடிகைகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருந்தாலும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் நிசப்தம் படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் வசனமே இல்லை என்பதும் சிறப்பு. இந்த படத்தை ஏற்கனவே அமேசான் தளத்திற்கு விற்று விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top