fbpx
Connect with us

Cinemapettai

படம் போட்டா ஒரு பயலும் வர மாட்டான், ஆனா இதுக்கு கூட்டம் அள்ளும்.. தியேட்டர்காரர்களின் மெகா பிளான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படம் போட்டா ஒரு பயலும் வர மாட்டான், ஆனா இதுக்கு கூட்டம் அள்ளும்.. தியேட்டர்காரர்களின் மெகா பிளான்!

சமீபகாலமாக OTT தளங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமாக தொடங்கியதிலிருந்து தியேட்டர்காரர்கள் பீதியில் கலங்கி போய் உள்ளனர்.

தியேட்டரில் ஒரு படத்தின் டிக்கெட் என்னவோ 120 ரூபாய் தான். ஆனால் பார்க்கிங், பாப்கான் செலவு, வாட்டர் பாட்டில் செலவு என தியேட்டர்களை பொறுத்து விலையிலும் மாறுபாடு ஏற்படுகிறது.

சாதாரணமாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திரையரங்குக்கு சென்று வந்தால் அதுவும் குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு சென்று வந்தால் குறைந்தது 2000 மாவது செலவாகி விடுகிறது.

இதுவே மாதத்திற்கு 150 ரூபாய் கட்டி புது புது படங்களை வீட்டிலேயும் நினைத்த நேரம் மொபைல்களிலும் பார்த்துக்கொள்ள மக்கள் முடிவு எடுத்து விட்டனர். அதன் வெளிப்பாடு தற்போது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது.

இந்நிலையில் தியேட்டர்காரர்கள் படம் போட்டால் யாரும் வர மாட்டார்கள் எனவும், மக்களை ஒன்று திரட்ட நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப திட்டம் போட்டு வருகிறார்களாம்.

இவ்வளவு நாள் தியேட்டரில் பார்த்த படங்களையே வீட்டில் பார்க்க தயாரான மக்கள், இதுவரை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் போட்டிகளை தியேட்டரில் பார்ப்பார்களா!

மங்குனி அமைச்சர் போல் வேலை பார்க்கும் தியேட்டர்காரர்கள் என்ன சொல்வது. எது எப்படியோ இனி திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் படங்களைத் தவிர வேறு எந்த படத்திற்கும் கூட்டம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

Continue Reading
To Top