பாகுபலி 2 படம் இணையதளங்களில் வெளியானது தொடர்பாக நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனிடம் நேரில் சென்று புகார் அளித்தார். புதுப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் கேட்டிருந்தார்.

தொடர்ந்து மே 30 ம் தேதி முதல் ஒட்டுமொத்த சினிமாத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்கத்தினரும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக நேற்று அறிவித்துள்ளார். புது படங்களில் இணையதளங்களில் வெளியிடுவது தொடர்பாக விஷால் இன்று தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளதார்.

முதல்வரை சந்தித்த பிறகு விஷால் ஸ்டிரைக் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தெரிகிறது. ஆனால் இணையதளங்களில் வெளியானாலும் பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீசான 9 நாட்களிலேயே ரூ.1000 கோடியை வசூலித்து, இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

 

அடுத்த சில நாட்களில் ரூ.2000 கோடி வசூல் செய்த ஒரே இந்திய படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 எட்ட உள்ளது. இதனால் விஷால் அறிவித்துள்ள ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தர தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு முன் பல படங்கள் இணையதளங்களில் வெளியான போது அமைதியாக இருந்த விஷால் இப்போது பாகுபலி 2 க்கு மட்டும் ஸ்டிரைக் அறிவித்திருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.