ஓடிடி ரிலீஸில் விஜய்சேதுபதியை மிஞ்சும் சூர்யா.. கடும் நெருக்கடியில் தியேட்டர் முதலாளிகள்

2020 மார்ச்சில் அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் திரைத்துறையை சேர்ந்த பலதரப்பட்டவர்களுக்கும் ஏன் மக்களின் பொழுதுபோக்கையும் நிறைத்தது ஓடிடி என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் ஓடிடி யில் அதிக படம் வெளியிட்ட நாயகன் என்ற புகழுக்கு சொந்தக்காரராகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

க/பெ ரணசிங்கம் படத்தை தொடர்ந்து மாஸ் படங்களுக்கு மவுசான தளமானது ஓடிடி அடுத்து வரும் லாபம் திரைப்படம் விஜய் சேதுபதிக்கு செப்டம்பர் 9ஆம் தேதி தியேட்டரில் வெளியிடுவதாய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் துக்ளக் தர்பார் படம் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளது. கடந்த ஆண்டு வெளியான டெடி மற்றும் சார்பட்ட பரம்பரை படத்தினை வைத்து இரண்டாம் இடத்தில் உள்ளார் ஆர்யா.

சூர்யா மற்றும் தனுஷ் தலா ஒரு படங்களுடன் உள்ளனர். ஓடிடியில் மேலும் நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் 5 படங்கள் ஓடிடி யில் வெளியிட இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. என்னதான் நெட்ஃபிளிக்ஸ் அமேசான் ப்ரைம் என பார்த்தாலும் தியேட்டரில் பார்ப்பது போன்ற எபெக்ட் இல்லை என கூறும் திரையரங்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும்.

theaters
theaters

தியேட்டரிலலே ரிலீசாகும் படங்களுக்கு நிகராக ஓடிடி யில் வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும் சில நடிகர்களின் படங்கள் தியேட்டரில் தான் அதிகம் கொண்டாடப்படுவதாலும் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருப்போர் பலருண்டு.

தயாரிப்பு நிறுவனங்களை பொறுத்தவரை மக்களை மகிழ்வித்து பணம் பெற்றது மாறி நிறுவனத்தை மகிழ்வித்தால் பணம் என்கிற டீல் மிகவும் சுலபமாகும் மேலும் லாபகரமானதாகவும் உள்ளதாய் ஒரு தகவலும் வருகிறது.

ஓடிடியில் அதிக படங்கள் தந்த நாயகி என்ற பெருமைக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொந்தக்காரராகிறார்.

என்னதான் தியேட்டர்கள் இத்தனை காலம் மூடப்பட்டு உரிமையாளர்களின் செலவுகள் அதிகமாகி இருந்தாலும் வரும் காலம் என்பது டிக்கெட் விலையையும் ஸ்நாக்ஸ் விலையையும் குறைப்பதால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியும் என நம்பலாம். காரணம் படம் வெளியாகி சில தினங்களில் இணையங்களில் வருவதும் விசிடிகளில் வருவதும் என குடும்பமே சேர்ந்து பார்க்கவே குறைந்த செலவே ஆகும் என்கிற இடர்பாடு தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்