விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக நடித்து ‘மதுரை வீரன் தானே’ என்ற ஒரே பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.

என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் பறவை முனியம்மா, தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற்றார். இன்றைக்கு வாய்ப்பு குறைந்து போனதால் வறுமையில் வாடுவதாகவும், முதியோர் உதவித் தொகை கேட்டு அரசை அணுகியிருப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்த முனியம்மா அடிப்படையில் ஒரு நாட்டுப்புற பாடகி. ஊர் திருவிழாக்களில் முனியம்மாவின் பாட்டுக்கு கூட்டம் அள்ளும்.

சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.

இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள்.

சின்னத்திரை சமையல் ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் சமையல் குறிப்பு வழங்கி அசத்தினார். அம்மியில் பாடிக்கொண்டே அரைத்து ருசிக்க ருசிக்க சமையல் கற்றுத்தருவார் பரவை முனியம்மா.

வறுமையில் வாடும் முனியம்மா தற்போது வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா.

ஏற்கனவே இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் உதவிக்கு யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின, இதனையடுத்து விஷால், தனுஷ் போன்ற நடிகர்கள் பண உதவி செய்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தைராய்டு நோயால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் அவரை அவரது மகளும் மருமகனும் தான் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரேஷன் அரிசி சாப்பிட்டு ஜீவன் வாழ்வதாய் கூறும் முனியம்மா முதியோர் உதவித் தொகையை கேட்டு காத்திருக்கிறார். உதவித்தொகை கிடைக்குமா? மருந்து வாங்குவதற்கு கூட அவரிடம் காசு இல்லை.

அவருக்கு முதியோர் உதவி தொகைக் கூட தேவை இல்லை . கிராம கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகை கிடைத்தாலே அவர் கலைக்கு கிடைத்த அங்கிகாரமாக இருக்கும் என்கின்றனர் அவரது உறவினர்கள்.