பொதுவாக சினிமா மீதான, சினிமா ஹீரோ,  ஹீரோயின்கள் மீதான மோகம் இன்றளவும் குறையவில்லை.

அந்த மூன்றெழுத்து ஹீரோ நடிக்கும் தெலுங்கு படம் ஏற்காட்டில் நடந்தது. சூட்டிங் பார்க்க ஏற்காடு மலை கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

அதில் ஒரு அப்பாவி அழகி அந்த ஹீரோவைக் காண தினமும் வந்து அவர் பார்வை படும்படியாக நின்று பிரமிப்பாக பார்ப்பார்.

ஹீரோவும் நோட் பண்ணி விட்டார். மெல்ல அந்த கிராமத்து அழகியை அழைத்தார். மிரண்டு போனாள் அந்த அழகி, அருகில் போனாள்.

ஹீரோ மென்மையாக உடை மாற்ற, கொஞ்சம் ஓய்வெடுக்க ஏதாவது வீடு கிடைக்குமா என்று தெலுங்கில்   கேட்டார்.

அதிகம் படித்தவை:  சாமி போல் நம்பினேன் என்னை மோசம் செய்துவிட்டார்.! ஸ்ரீரெட்டி லீக்கில் மேலும் ஒரு பிரபல நடிகர்.!

அந்த கிராமத்து அழகி ” எங்கவீடு இதோ இங்க தான் சார். அப்பாக்கிட்ட கேட்டுட்டு வர்றேன் சார் என்று பறந்தாள்.

தனது வீட்டில் கனவு நாயகனா..? அப்பா அம்மாவிடம் அனுமதி வாங்கி விட்டாள்.மறுநாள் ஹீரோ அந்த அழகி வீட்டில் ஓய்வெடுத்தார். உடை மாற்றினார்.

கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள் அழகி. தனது சாதுர்ய பேச்சால் கிராமத்து அழகியை மடக்கினார் ஹீரோ.

அன்று படப்பிடிப்பு இல்லை. அந்த கிராமத்து அழகியிடம் என் கூட வந்து ஏற்காட்டை சுற்றிக்காட்ட முடியுமா என்றார் தலை ஆட்டினாள்.

மறுநாள் அந்த கிராமத்து தேவதையை காரில் ஏற்றிக்கொண்டு பறந்தார் ஹீரோ.. தொட்டு தொட்டு பேசினார் அணைத்தார். யாரும் இல்லாத மலை கிராமத்தில் காரை நிறுத்தினார்…….

அதிகம் படித்தவை:  AARATHU SINAM Official Trailer

மாலை வீடு திரும்பும் போது அந்த அப்பாவிப் பெண் கலைந்து சோர்வாகி.. காரில் கிடந்தார். வீட்டில் இறக்கி விட்டார் ஹீரோ.

அடுத்த மூன்றாவது நாள் சூட்டிங் முடிந்து யூனிட் கிளம்பியது. ஹீரோவும் கிளம்பி விட்டார். அடுத்த மாதமே கர்ப்பம் ஆனார் அந்த அழகி.

வீட்டில் அடி உதை. வெளியேவும் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண்ணால் ஹீரோவை மறக்கவே  முடியவில்லை.

ஒரு இரவில் அம்மா அப்பா தூங்கியதும்  எழுந்தாள்.. அழுதாள். அம்மாவின் சேலையை எடுத்தாள் தூக்கு மாட்டி செத்துப் போனாள்.

இன்றளவும் மகளை பறி கொடுத்து சோகத்தில் நடைப் பிணமாக அலைகின்றனர் பெற்றோர்..!