பல கோடிகளுக்கு மயங்கிய உலகநாயகன்.. முதன்முதலாக மற்ற ஹீரோக்களுக்காக எடுக்க போகும் அவதாரம்

கமல் 80, 90களில் நடித்து என்னதான் முன்னணி ஹீரோவாக வலம் வந்திருந்தாலும் அவருடைய படங்களால் இந்த காலத்து ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்றே சொல்லலாம். அந்த நேரத்தில் கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் அந்த கவலையை போக்கிவிட்டார்.

அதிலும் இப்படத்தில் வில்லனாக நடித்த ரோலக்ஸ் கேரக்டர் நாலா பக்கமும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் இதற்கடுத்து வரும் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் வில்லன் கேரக்டருக்கு முன்னணி நடிகர்களை குறி வைத்து வருகிறார்கள். அத்துடன் அந்த வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு எவ்வளவு கோடி கொடுப்பதற்கும் ரெடியாக இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

Also read: தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.. கமல் செய்த வசூல் சாதனை

அந்த வரிசையில் தற்போது கமல் வில்லனாக அடி எடுத்து வைக்கப் போகிறார். அதாவது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை மிகப் பிரம்மாண்டமாக முறையில் தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வைப்பதற்கு அனைத்து வேலைகளும் மும்மரமாக பார்த்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தை இதுவரை இந்தியாவில் எடுக்காத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க உள்ளார்கள். அத்துடன் இதில் மிகப் பெரிய நடிகரை வில்லனாக ஆக்க வேண்டும் என்பது தான் தயாரிப்பாளரின் முழு எண்ணமே. அந்த வில்லனை வைத்து தான் படத்தை போக்கஸ் பண்ண வேண்டும் என்பதால் அதற்காக கமலை அணுகியிருக்கிறார்கள்.

Also read: இறுதி அஞ்சலி செலுத்த வராத கமல்.. கிளம்பிய எதிர்ப்பு, உண்மையான நண்பனாக செய்த கடைசி மரியாதை

அவரும் ஆரம்பித்தில் யோசித்த நிலையில் 150 கோடி சம்பளத்தை கொடுப்பதாக சொல்லி அவரை மயக்கி விட்டார்கள். அதிலும் அவருடைய கால்ஷீட் வெறும் 20 நாட்கள் மட்டுமே. அப்படி என்றால் 20 நாளுக்கு இத்தனை கோடியா என்று வாய் அடைக்கும் அளவிற்கு தற்போது இவருடைய நிலவரம் இருக்கிறது.

இந்த அளவிற்கு குறுகிய காலத்தில் எந்த நடிகரும் சம்பளத்தை பெறவில்லை. இந்தியாவில் அந்தப் பெருமை கமல் அவருக்கு கிடைத்திருக்கிறது. இதை கேட்டதும் கமல் கண்ணை மூடிக்கிட்டு ஒகே என்று சம்மதத்தை தெரிவித்து விட்டார். அதேபோல் இப்படத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கேமரா எதுவும் இல்லாமல் ஹாலிவுட் இருந்து வரவழைக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள்.

Also read: அந்த நடிகைக்காக தலைகீழாக நிற்கும் சிம்பு.. ஹீரோயின் தேடும் படலத்தில் இறங்கிய கமல்