ஒரே பாடலால் உச்சம் தொட்ட பாடகர் செய்யும் வேலை.. கவர்ச்சி குத்தாட்டம் போட வைத்த மாளவிகா

ஒரே பாடலில் பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸான பாடகர் ஒருவர் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு பாட்டு பாடுவதை நிறுத்தியுள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்டு பலரை வியக்க வைத்திருக்கிறது.

‘பாட்டு பாடுகிற திறமை இருக்கும் நிறைய பேருக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என பிரபல கானா பாடகர் ஒருவர் பாடுவதில் இருந்தே விலகி உள்ளாராம். மேலும் அவருடைய ஏரியாவில் உள்ள பாடகர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

Also Read: கானா பாலாவின் அதிரடி முடிவு,அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

அதுமட்டுமின்றி நல்லா படிக்கும் குழந்தைகளுக்கு சர்டிபிகேட்டை கொண்டு நீட்டினால் போதும் 5000 ரூபாய் பணமும் பரிசுப்பொருட்களும் கொடுத்து அனுப்புகிறார். கானா பாலா தான் அந்த நபர்.

இவர் 2006 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் நரேன்-பாவனா நடிப்பில் வெளியான, சித்திரம் பேசுதடி என்ற படத்தில் இடம்பெற்ற ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்ற ஒரே பாடலை பாடியதன் மூலம் உச்சம் பெற்றுவிட்டார்.

Also Read: ஓவர் பேச்சால் பல்பு வாங்கிய பாவனா.. இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி!

இந்தப் பாடல் மட்டுமல்ல அட்டக்கத்தி படத்தில் இடம்பெற்ற ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ போன்ற பாடல்களையும் பாடி பிரபலமானார். அதன்பிறகு ஏராளமான சூப்பர் ஹிட்டான கானா பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்தார்.

இவர், இசையமைப்பாளர் தேவாவிற்கு பிறகு கானா பாடல்களின் மூலம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தவர். இப்படி தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை எக்கச்சக்கமான கானா பாடல்களை பாடி பேரையும் புகழையும் சம்பாதித்த கானா பாலா தற்போது இளம் பாடகர்களை வளர்த்து விடுவதுடன், மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.

Also Read: அந்தரங்க சீண்டலை குறித்து வாயை திறந்த பாவனா.. 5 வருடங்களுக்குப் பிறகு வெடிக்கும் பிரச்சனை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்