திமுகவுடன் அரசியலுக்கு அடி போட்ட சூர்யா.. விருமன் விழாவில் நடந்த சுவாரஸ்யம்

சூர்யா சினிமாவைத் தாண்டி பொது வழியில் நிறைய உதவிகள் செய்து வருகிறார். தனது அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். இது தவிர எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வார். அதுமட்டுமல்ல வெளியில் தெரியாமலும் பல உதவிகள் செய்து வருகிறார்.

அரசியலில் நுழைவதற்காக தான் சூர்யா இவ்வாறு செய்கிறார் என அடிக்கடி பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் தம்பி கார்த்தி விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கதாநாயகன் கார்த்தியை விட சூர்யாவுக்கு தான் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் மேடையில் பேசிய சூர்யா மதுரை எம் பி வெங்கடேசனை பற்றி பேசி இருந்தார். அதாவது நட்பா, உறவா என்று சொல்லும் அளவிற்கு பல வருடமாக எங்களுக்குள் ஒரு அன்பு இருப்பதாக சூர்யா கூறியிருந்தார்.

மதுரை மக்களுக்காக அனைத்து உரிமைகளுக்கும் போராடியவர் வெங்கடேசன் என சூர்யா பாராட்டி பேசியிருந்தார். மேலும் அவருடன் ஒரு புதிய பயணத்தில் இணைந்து உள்ளதாக சூர்யா குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வேறு ஒரு மேடையில் சொல்வதாக கூறியிருந்தார். அதாவது வெங்கடேசன் ஒரு புதின எழுத்தாளர். இவர் பல படைப்புகளை எழுதி உள்ளார்.

அதில் காவல் கோட்டம் என்ற புதினத்தை திரைப்படமாக வசந்தபாலன் அரவான் என்ற பெயரில் எடுத்து இருந்தார். ஆனால் தற்போது சினிமாவைத் தாண்டி ஒரு பொதுசேவை செய்வதற்காக தான் வெங்கடேசன் அவர்களுடன் சூர்யா இணைந்து உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் சூர்யா அரசியலில் நுழைய உள்ளாரா என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் மதுரை மக்களுக்கு சூர்யா சாப்பாடு வழங்கும் போது வெங்கடேசன் நன்றி கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சூரரை போற்று படத்திற்காக சூர்யாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போதும் வெங்கடேசன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்