எம்ஜிஆர் உயிரை காப்பாற்றிய பெண் சாமியார்.. டாக்டர்களை மிரள வைத்த மிராக்கிள்

MGR: உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் தான் நடமாடும் தெய்வங்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களே சிக்கலான சில ஆபரேஷன்கள் வெற்றியடையும் போது மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்வார்கள்.

அது எம்ஜிஆர் விஷயத்திலும் நடந்து இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு.

இவரை எம்ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இப்போதும் கூட இது ஒரு சர்ச்சையான மற்றும் மர்மமான செய்தியாகவும் இருக்கிறது.

அப்போது எம்ஜிஆர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ என பல்லாயிரக்கணக்கான மக்களும், ரசிகர்களும் மருத்துவமனை வாசலிலேயே தவம் இருந்தார்கள்.

டாக்டர்களை மிரள வைத்த மிராக்கிள்

டாக்டர்களும் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். ஆனால் புல்லட்டை எடுப்பதில் மட்டும் சிரமம் இருந்தது ஏனென்றால் புல்லட் தொண்டை மற்றும் கழுத்துக்கு நடுப்பகுதியில் இருந்தது.

அதை ஆபரேஷன் மூலம் எடுப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். இதனால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி இருக்கிறார்கள்.

அப்போது சேலத்தில் இருந்த பெண் சாமியார் ஒருவர் எம்ஜிஆருக்காக யாகம் செய்திருக்கிறார். மேலும் முள் மீது அமர்ந்து தவம் இருப்பது என என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு விபூதியும் பூசி விட்டிருக்கிறார். அப்போது எம்ஜிஆருக்கு திடீரென ஒரு தும்மல் வந்திருக்கிறது.

அதில் அந்த புல்லட் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்து இருக்கிறது. அதை தொடர்ந்து மருத்துவர்களும் சுலபமாக அதை வெளியில் எடுத்து விட்டார்களாம்.

அதன் பிறகு எம்.ஜி.ஆரும் ஆபத்து கட்டத்தை தாண்டி உடல்நலம் தேறி வந்தார். இதற்கெல்லாம் காரணம் அந்த பெண் சாமியார் தான் என்று சொல்லப்பட்டது.

ஆனால் எம்ஜிஆருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அந்த பெண் சாமியாரை சந்தித்து பேசி சந்தோஷப்பட்டாராம். ஆக மொத்தம் டாக்டர்களையே மிரளவிடும் வகையில் மிராக்கிள் செய்திருக்கிறார் அந்த சாமியார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்