தங்கலான் படத்தில் மதத்தை அவமானப்படுத்தியதால் உருளும் பா ரஞ்சித்தின் தலை.. வழக்கு போட்ட பெண் வழக்கறிஞர்

Pa Ranjith : பா ரஞ்சித்தின் படங்கள் எந்த அளவுக்கு பாராட்டப்படுகிறதோ அதே அளவுக்கு ஒருபுறம் விமர்சனத்திற்கும் உள்ளாகுவது வழக்கம் தான். அவ்வாறு இப்போது தங்கலான் படத்திற்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். எப்போதுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக தான் பா ரஞ்சித்தின் படங்கள் இருக்கும். இது பற்றி பல மேடைகளிலும் ரஞ்சித் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த சூழலில் தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக கூறுவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் பொற்கொடி வழக்கு கொடுத்துள்ளார்.

பா ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர்

அந்த காட்சி பலரையும் புண்படுத்தியதாகவும் உடனடியாக அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த காட்சியை நீக்காவிட்டால் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்ரமின் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சிக்கல் வந்து சருக்களை சந்தித்து வந்தார். தங்கலான் படத்தின் மூலம் தான் மிகப்பெரிய வெற்றியை சுவைத்திருக்கிறார். இப்போது அதற்கும் பிரச்சனை விளைவிக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இந்த வழக்க விசாரித்த பின் காட்சிகள் நீக்காவிட்டால், படத்தை முழுவதுமாக தடை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார். இப்போது இந்த பிரச்சனையால் ரஞ்சித்தின் தலை உருளுகிறது.

தங்கலான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

Next Story

- Advertisement -