அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. அடுத்து படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படத்தின் பூஜை ஜுலை 6ம் தேதி 2016ம் ஆண்டு போடப்பட்டது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜுலை 6ம் தேதி 2017ம் ஆண்டு முடிந்துள்ளது. ஜுலை 6ம் தேதியே தொடங்கி ஜுலை 6ம் தேதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. வருடம் மட்டும் வித்தியாசம். இதனை கவனித்த ரசிகர்கள் இயக்குனர் சிவா அவர்களை பாராட்டி வருகின்றனர்.

அடுத்து வருகிற ஜுலை 10ம் தேதி இப்படத்தின் இரண்டாவது பாடல் மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது,