காமெடி நடிகர் பாலாஜி மீது நேற்று (மே 23) மாதவரம் போலீசில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அதில் தன்னை பாலாஜி கொடுமைப்படுத்துவதாகவும், சாதியைக் குறிப்பிட்டு திட்டுகிறார் என்று புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து பாலாஜி பேசும்போது, ஒரு குடும்பத்தில் சாதாரணமாக வருகிற சண்டையை அவங்க வசதிக்காக சாதியைச் சொல்லித் திட்டினதா மாத்தியிருக்காங்க. அவங்ககூட இருக்கிற சிலரின் தவறான ஆலோசனையைக் கேட்டுட்டு இப்படிப் பண்றாங்க.

சில பிரச்சனைகளின் போது, இது என் வீடு, வீட்டைவிட்டு வெளியே போ என்று கூறுகிறார்கள். ஆனால் மாமனார் வீடு என்றாலும் வாடகை கொடுக்கிறேன்.

போலீசில் புகார் கொடுத்த பிறகு கூட மனைவியிடம், நாம் பேசி முடிக்க வேண்டிய விஷயம், நாம் பேசுவோம் என்று சொன்னேன். ஆனால் அவர், உன்னை உள்ளே தள்ளுவேன், ஜெயில்ல உட்காரவைப்பேன் என்று கூறுகிறார்கள். வீம்புக்குப் பேசிறவங்ககிட்ட நான் என்ன பதில் பேச முடியும்?

இந்த பிரச்சனையில் எங்கள் குழந்தை பாதிக்கப்படுவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது என்றார்.