India | இந்தியா
ஒரு வெள்ளை தலித்.. பல சர்ச்சைகளை கிளப்பி பட்டையை கிளப்பும் நாவல்
ஒரு வெள்ளை தலித் என்ற இந்த ஆங்கில நாவலின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ?. கதையும் அப்படித்தான். இதன் கதையின் களம் – கடலூர் மாவட்டம், பறையர் சமூகத்தைச் சேர்ந்த 16-வயது பள்ளி மாணவனின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு சமூக நாவல் இது.
ஏற்கனவே, இந்தியா முழுவதும் வெளிவந்த தலித் சமூக சார்ந்த நாவல்களின் இது வித்தியாசமான முயற்சி. அதிலும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு இருப்பது இந்த படைப்புக்கு கூடுதல் மதிப்பை உயர்த்துகிறது.
கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழ்நாட்டின் மாவட்டங்களின் காணப்படுகின்ற கிராம சூழ்நிலையில் பறையர்-வன்னியர் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களை எல்லாம் பொதுஜனம், கிராம சூழல், பொருளாதாரம், சாதிய மோதல், சட்ட ஒழுங்கு போன்ற பார்வைகளில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு சிறுவனின் பார்வையில் நடக்கும் சம்பவங்களாகவே கதையை படிப்பவர்களின் முன்னால் இந்த நாவல் அழகான எடுத்து வைக்கிறது.
உடல் அளவிலும், மன அளவிலும் முழுமையான வளர்ச்சி பெறாத வளர் இளம் பருவத்தில் இருப்பவர்கள் எப்படி பட்ட எண்ணங்களுடன் இருப்பார்கள், உணர்ச்சிகள் எப்படி இருக்கும் ? சமூக சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வார்கள் ? என்கிற ஒட்டத்தை நாம் ஒரளவுக்கு கணிக்க முடியும்.
ஆனால், ஆதிக்க சமூகத்தினரின் பழிவாங்கும் சூழ்நிலையில் சிக்கினால் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்த 16 வயது சிறுவன் என்ன செய்வான் என்பதுதான் இந்த வெள்ளை தலித் நாவல் விவரிக்கும் கதைதான்
சுமார் 300 பக்கங்கள் கொண்ட கதையில், கடலூர் மாவட்டத்தோடு தொடர்புடைய முந்திரி தோப்பு விஷயங்கள், கள்ளச் சாராயம், பன்றி இறைச்சி, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எளிய நடையில் காண முடியும்.

the-white-dalit-noval-in-english
இந்த படைப்பு விரைவில் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வெளிவர வேண்டும் என்பது இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கும். அதே நேரத்தில், தமிழில் வெளி வந்தால் வன்னியர் சமூகத்தை கடுமையாக விமர்சித்து கருத்துகளும், வசனங்களும் இருப்பதால் இந்த நாவல் பெரும் சர்ச்சைகளை உருவாக்கலாம்.
வெள்ளை தலித் நாவலை Flipkart-ல் பெற – Click here
வெள்ளை தலித் நாவலை Amazon-ல் பெற – Click here
