அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகை ஆவர், இவர் நடித்த பாகுபலி படம் ஹிட் ஆனதால் இவரின் மார்க்கெட் இப்பொழுது வேற லெவல்லில் இருக்கிறது.

அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகுபலி-2 மாபெரும் ஹிட் ஆனது இந்த படம் உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே ,பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடி கணக்கில் வசூல் மழை பொழிந்தது. 

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் இந்த படத்திலும்  ‘பாகுபலி’ போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம் முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம் நடித்துள்ளனர்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘பாக்மதி’. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஜி.அசோக் என்பவர் இயக்கி வருகிறார்.

முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.தமன் இசையமைத்து வரும் இதனை ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதுவும் தமிழ் சினிமாவில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கும் ஹாரர் காமெடி ஜானராம். இந்த படத்திலும் ‘பாகுபலி’ போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை அடுத்த ஆண்டு (2018) சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே நாளில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் விஷாலின் ‘இரும்பு திரை’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏன் என்றால் சூரியாவுக்கு சிங்கம்-3 பிறகு ரொம்ப நாளாக எந்த படமும்  வரத்தால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அதே போல் விஷல் நடித்து வரும் படங்களும் ஹிட் அடித்துக்கொண்டு வருவதால்  இந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.எது எப்படியோ பொங்கலுக்கு முன்னணி நடிகர் படங்கள் அதிகம் வருவதால் யாருக்கு மாபெரும் பொங்கலாக அமையும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.