Rajini : இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் கோட், வேட்டையன் விடாமுயற்சி போன்ற படங்கள் அடங்கும். சமீபத்தில் விஜய்யின் கோட் படம் வெளியான நிலையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்த நிலையில் வேட்டையனும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் முதல் சிங்கிளான மனசிலாயோ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது.
இன்று அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI டெக்னாலஜி மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
வேட்டையன் படத்தில் பிரபல பாடகரின் குரல்
சமீபத்தில் கோட் படத்தில் கூட பாடகி பவதாரணியின் குரலை ஏஐ மூலம் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்து இருந்தார். இந்த சூழலில் அனிருத்தும் இப்போது மலேசியா வாசுதேவன் குரலை வேட்டையன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் படத்தில் மலேசியா வாசுதேவனின் குரல் ஒரு மேஜிக்கை ஏற்படுத்த உள்ளது.
இப்போது வெளியாக இருக்கும் ப்ரோமோ வீடியோவே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த நிலையில் நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேட்டையன் படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது.
ஆகையால் படக்குழு படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஆகையால் அடுத்தடுத்து வேட்டையன் பட அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்த இருக்கிறது.
மாஸ்காட்ட வரும் ரஜினியின் வேட்டையன்
- சிவகார்த்திகேயன் ரஜினியிடம் கேட்ட கதாபாத்திரம்
- ரஜினி பொண்டாட்டி, பொண்ணுங்க கிட்ட போய் இத பத்தி கேளுங்க
- நரசிம்மா, மேத்யூக்காக ரஜினிகாந்த் செய்த வேலை