சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

அஜித்துடன் இணைந்த விஜய் பட நடிகர்.. அட இனிமேல் இவர கையில புடிக்க முடியாது

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் விஜய் பட நடிகர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்பட ஷூட்டிங் ரொம்பத் தாமதமான நிலையில் அதனால் கடுப்பான அஜித்குமார், அப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

ஹாலிவுட் பாணியில் உருவாகும் குட் பேட் அக்லி

அதேபோல் இப்பட ஷூட்டிங் தாமதம் ஆவதை தெரிந்துகொண்ட அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் முதல் படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிட்டனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் அஜித்துடன் எஸ்.ஜே. சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலானது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து யார்? யார்? நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், அஜித்தின் 63 வது படமான குட் பேட் அக்லி படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி வருகிறது என தெரிகிறது. இந்தப் படத்தில் சூட்டிங் ஐதராபாத்தில் சில மாதங்கள் நடந்து வந்த நிலையில், அந்த ஷெட்டியூல் முடிவடைந்த பின், அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில் அங்கு ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் 2025 ஆம் ஆண்டு அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகி வருகிறது.

அஜித்துடன் நடிக்கும் விஜய் பட நடிகர்

இந்த நிலையில், கைதி, அந்தகாரம் ஆகிய படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அநீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார்.

Arjun Das
இதுகுறித்து அர்ஜூன் தாஸ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ’’அஜித் சாருடன் இணைந்ததில் நான் மகிழ்கிறேன். இது என் கனவு நினைவாகிய நேரமிது. அதற்காக அஜித் சாருக்கு என் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி கூறிக் கொள்கிறேன். இப்படம் மூலம் உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தியாக்குவேன் என நம்புகிறேன். ரசிகர்கள் அஜித் சாருடன் படம் பண்ணுவீர்கள் என கேட்டார்கள். தற்போது அது நடந்துள்ளது. அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்த அர்ஜூன் தாஸ் இப்படத்திலும் அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறாரா? அல்லது தற்போது ஹீரோவாக நடித்து வருவதால் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாரா? எனக் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் அர்ஜூன் தாஸுன் மார்க்கெட்டும் இனி உயரும், பட வாய்ப்புகள் பெருகும் என கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News