பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார். தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகளாம். விஜய்-க்கு எதிராக மோதும் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அட்லியின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசல், நீதானே பாடல்கள் போன்றவை ரசிகர்களை ஈர்த்த நிலையில், மெர்சல் டீசரும் வெளியாகியது, இதனை விஜய் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.விஜய்யின் மெர்சல் தீபாவளி ரேஸில் களம் இறக்கப் படுகின்றன இதனுடன் போட்டி போடா விஷால் நடித்த படம் வெளிவரும் என்ற செய்தி வெளியானது.

அதிகம் படித்தவை:  விஷாலின் இரும்புத்திரை படத்தின் பாடல்கள்.!

சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு ‘புரட்சி தளபதி’ விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள படம் ‘வில்லன்’. மலையாள படமான இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடித்துள்ளார். அவருக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் விஷால் வலம் வரவுள்ளாராம்.

மேலும், முக்கிய வேடங்களில் ஹன்சிகா, ஸ்ரீகாந்த், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ புகழ் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ‘4 மியூசிக்ஸ்’ இசைக்குழு இசையமைத்துள்ளது, சுஷின் ஷ்யாம் பின்னணி இசையமைத்துள்ளார், ஷமீர் முஹமத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ராக்லைன் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.vijay vishal

அதிகம் படித்தவை:  பேசியவர்களுக்கு விஜய் கொடுத்த மறைமுக பதிலடி?

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் டிரையிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. முதலில் படத்தை வருகிற தீபாவளி ரேஸில் களமிறக்கத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, சில காரணங்களால் படத்தின் ரிலீஸை அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி ரேஸில் விஜய்யின் மெர்சல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என பின்னுக்கு போராங்களோ  இல்லை புலி பதுங்குறது பாயரதுக்கு தான தெரியல பொறுத்திருந்து பார்ப்போம்.