விக்ரமுக்கு இந்த நடிகர் தாய்மாமனா.. காதலால் பிரிந்த குடும்பம், முழு விவரம் இதோ

Vikram: விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் பல மாதங்களாகவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அதில் விக்ரம் பேசிய பல விஷயங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. அதேபோல் ஹைதராபாத், பெங்களூர் என பட குழு சுத்தி சுத்தி ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் இருக்கும் உறவு பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பிரசாந்தின் அப்பா தியாகராஜன் விக்ரமின் தாய்மாமன் என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

இவர்கள் குடும்பம் தற்போது பேச்சுவார்த்தையில் இல்லை. இதற்கு முக்கிய காரணம் காதல் பிரச்சினை தான். அதாவது கில்லி படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடித்தவர் தான் விக்ரமின் தந்தை.

விக்ரமின் தாய்மாமன் இந்த நடிகர் தான்

அவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தபோது தியாகராஜனின் அப்பாவுடன் நெருங்கிய நட்பில் இருந்திருக்கிறார். அப்போது தியாகராஜனின் அக்காவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இதனால் இரு குடும்பத்திற்கு நடுவில் விரிசல் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் ஒதுங்கி இருந்தார்களே தவிர பெரிய அளவில் பிரச்சனை எதுவும் செய்து கொள்ளவில்லை. அந்த வகையில் தியாகராஜன் விக்ரமுக்கு தாய் மாமன் ஆவார்.

இதன் மூலம் பிரசாந்த் விக்ரம் இருவருக்கும் நடுவே பனிப்போர் இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதில் உண்மை கிடையாது. சமீபத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இருவர் படமும் மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தது. ஆனால் திடீரென பிரசாந்தின் அந்தகன் ஒருவாரம் முன்னதாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரமுக்கும் பிரசாந்துக்கும் இப்படி ஒரு உறவா.?

Next Story

- Advertisement -