அமெரிக்கா மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக வட கொரியா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்துள்ள வட கொரியா ‘அமெரிக்கா மீது போர் தொடுக்க எந்நேரமும் தயாராக இருக்கிறோம்’ என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வட கொரியாவை உருவாக்கியவரும் தற்போதையை அதிபரான கிம் யோன் -அன்னின் தாத்தாவுமாகிய Kim Il-Sung-வின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  அதிகமாக ஷேர் செய்யப்படும், நடிகை ரோஜாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம் உள்ளே !

இந்த விழாவில் வட கொரியாவை சேர்ந்த ராணுவப்படையினர் சில காட்சிகளை திரையிட்டு காட்டியுள்ளனர்.

அதில், அமெரிக்கா மீது எப்படி அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

வட கொரியாவில் இருந்து அணுகுண்டு ஏந்திய ஏவுகணை ஒன்று புறப்படுகிறது. பின்னர், அமெரிக்காவில் உள்ள ஒரு நகர் மீது அணுகுண்டு விழுந்து அந்த நகரமே அழிவது போன்ற காட்சிகள் அந்த படத்தில் இடம் பிடித்துள்ளன.

அதிகம் படித்தவை:  3.0வும் இணைந்து கலக்கும் பிரம்மாண்டத்தின் உச்சம் 2.0 ! ட்விட்டர் திரைவிமர்சனம் .

இக்காட்சிகள் மூலம் வட கொரியாவிற்கு அச்சுறுத்தல் அளித்தால் எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என வட கொரியா எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.