செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

தர்ஷினியின் கல்யாணத்தில் வர போகும் ட்விஸ்ட்.. உமையாளுக்கு பெருத்த அடியை கொடுக்கப் போகும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், உமையாள் ஆட்டி வைக்கும் பொம்மையாக குணசேகரன் எல்லாத்துக்கும் தலையாட்டி வருகிறார். அந்த வகையில் வரப்போற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் வேண்டாம். அதற்கு பதிலாக தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணத்தை பண்ணி வைத்துக் கொள்ளலாம் என்று உமையாள் கூறுகிறார்.

இதை கேட்டதும் குணசேகரன் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் நீ என்ன பண்ணினாலும் அதற்கு எனக்கு சம்மதம் என்று பூம்பூம் மாடு மாதிரி சம்மதத்தை கொடுத்து விட்டார். இது தெரியாமல் குணசேகரன் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் நிச்சயதார்த்தம் தானே என்று கொஞ்சம் மெத்தனமாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் ஈஸ்வரி தன்னுடைய மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்ற விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். அதனால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.

இதையெல்லாம் முடிவு கட்டும் விதமாக தர்ஷினிக்கு நடக்கப் போகிறது நிச்சயதார்த்தம் இல்லை கல்யாணம்தான் என்ற உண்மை தெரிய வரப்போகிறது. ஆனாலும் வழக்கம்போல் அவர்கள் வாய் சவடால் மட்டும் விட்டு பேசிக் கொண்டு வருகிறார்கள்.

களத்தில் இறங்கப் போகும் ஜீவானந்தம்

ஆனால் இந்த நேரத்தில் தர்ஷினி மனதார அப்பாவாக நினைக்கும் ஜீவானந்தம் தான் களத்தில் இறங்கப் போகிறார். அதாவது அதிரடியாக உள்ளே நுழைந்து மொத்த ஆட்டத்தையும் கலைக்கும் விதமாக ஜீவானந்தத்தின் செயல்கள் இருக்கப் போகிறது.

இதுவரை வெற்றியை மட்டுமே பார்த்து வந்த குணசேகரன் முதன்முதலாக தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அந்த வகையில் எல்லா தோல்விக்கும் மொத்தமாக முடிவு கட்டும் விதமாக நான்கு மருமகள்களின் செயல்கள் இருக்கப் போகிறது.

இந்த ஒரு விஷயத்தை வைத்து மக்களின் பேராதரவை மறுபடியும் மீட்டெடுக்க வேண்டும் என்ற மொத்த டீமும் முயற்சி செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ தர்ஷினியின் கல்யாணத்தில் ஒரு தரமான ட்விஸ்ட் இருக்கப் போகிறது. ஆனால் ஏற்பாடு பண்ண அதே கல்யாண மண்டபத்தில் அஞ்சனாவுக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடக்கப் போகிறது. ஓவராக பேசி குணசேகரனை விட அட்டூழியத்தை செய்து வரும் உமையாளுக்கு இது மிகப்பெரிய அடியாக விழப்போகிறது.

- Advertisement -

Trending News