Shobana: சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகைகளின் தற்கொலை என்பது என்றுமே புரியாத புதிர் தான். இளம் வயதிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் தான் காமெடி நடிகை ஷோபனா.
சில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
அதற்கு முன்பே சன் டிவியின் மீண்டும் மீண்டும் சிரிப்பு, விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார்.
இதன் மூலம் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார்.
சிறுத்தை படத்தில் ஒரு சீனில் கார்த்தி உடன் சண்டை போடும் காட்சியில் கூட வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.
ஷோபனாவின் தற்கொலைக்கு யார் காரணம்?
ஷோபனா கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
ஏன் வடிவேலுவை கூட காரணமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவருடைய சகோதரி.
சமீபத்தில் அவள் விகடன் சேனலுக்கு ஷோபனாவின் சகோதரி பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் ஷோபனாவுக்கு அல்சர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக சொல்லி இருக்கிறார்.
சிக்கன்குனியா வந்த பிறகு அவரின் உடல்நலம் ரொம்பவும் மோசமாக இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஷோபனாவுக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டதால் திருமணமும் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி இருந்தாராம்.
ஒரே நேரத்தில் உடலளவிலும், மனதளவிலும் அதிகம் துன்புற்று இருக்கிறார். இதனால்தான் தன்னுடைய தங்கை விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்.