Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தந்திரம்.. கமலின் கல்லாப் பெட்டிக்கு ஆபத்து

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். இவரின் படங்கள் தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்து வருகிறது. அந்தவகையில் கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் என வெற்றி மகுடத்தை சூடி வருகிறார் லோகேஷ்.

தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக லோகேஷ் இருந்து வருகிறார். கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை ஆடி வருகிறது. தற்போதும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது

இப்போது லோகேஷ் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளாராம். அதாவது நீண்டநாளாக லோகேஷுக்கு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தற்போது அதை தொடங்குவதற்கு சரியான நேரம் என லோகேஷ் யோசித்து உள்ளாராம்.

மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இளம் இயக்குனர்களுக்கு குறிப்பாக அவரது அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு வாய்ப்பு கொடுக்கும் வேலையில் தற்போது லோகேஷ் இறங்கி வருகிறார். இவருடன் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்ப்பவர்களை தற்போது கமலிடம் அனுப்பி இருக்கிறார்.

அதாவது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அவர்கள் கதை கூறிவருகிறார்களாம். இதனால் கமல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து நிறைய படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனாலும் கமலின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூலை பெற்றது விக்ரம் படம் தான்.

இதனால் கமல் தனது நிறுவனத்தின் மூலம் லோகேஷை வைத்த பல படங்களை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது லோகேஷ் தற்போது புரோடக்சன் கம்பெனி ஆரம்பிப்பதால் கமலின் கல்லாப் பெட்டிக்கே ஆபத்து வர வாய்ப்புள்ளது. மேலும் லோகேஷ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.

Continue Reading
To Top