அம்மா அப்பா முன் நடிகைக்கு கொடுத்த டார்ச்சர்.. வசமாக சிக்கும் பெரும்புள்ளி

Gossip: காலம் காலமாக அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் சினிமா துறையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக 90 வயது கிழவியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்த கொடூரம் அதிகரித்துள்ளது.

தற்போது மலையாளத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் இந்த புகாரில் சிக்கி வருகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களுக்கு நடந்த துயரங்கள் ஒவ்வொன்றையும் வெட்ட வெளிச்சம் ஆக்கி வருகின்றனர்.

இதனால் யாருடைய பெயர் எப்போது மாட்டும் என்ற பீதியில் நடிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் கோலிவுட் பக்கமும் இந்த அலை வீசிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் எழுப்பி இருக்கும் புகார் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகைக்கு நடந்த கொடூரம்

ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இந்த நடிகைக்கு அரசியல் புள்ளி ஒருவர் பயங்கர டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். நடிகையை வீடு தேடி போய் அம்மா அப்பா கண் முன் கடத்திய சம்பவமும் நடந்திருக்கிறது.

இது நடிகையின் குடும்பத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அப்போது அந்த பெரும்புள்ளிக்கு எதிராக ஒரு துரும்பை கூட நடிகையால் அசைக்க முடியவில்லை.

தற்போது ஆட்சி மாறிவிட்ட நிலையில் இந்த புகாரை தைரியமாக முன் வைத்திருக்கிறார். ஏற்கனவே அந்தக் கட்சி பல சிக்கலில் சிக்கி வரும் நிலையில் நடிகையின் இந்த புகார் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த பெரும்புள்ளி மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

பெரும்புள்ளியின் மேல் நடிகை வைத்த புகார்

Next Story

- Advertisement -