தோண்ட தோண்ட வெளிவரும் மர்மம்.. பெரிய மனுஷன் போர்வையில் நடிகர் செய்த அசிங்கம்

Gossip: அண்டை மாநிலத்தில் நடிகைகள் தூக்கிய போர் கொடி இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சினிமா துறையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் சாதாரணம் என அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.

இந்த பிரச்சனையால் திறமையான நடிகைகள் கூட சினிமாவை கண்டு தெறித்து ஓடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இன்னும் சிலர் குடும்ப தேவை போன்ற காரணங்களுக்காக இதற்கு அடங்கிப் போகும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

ஆனால் இப்போது அவற்றையெல்லாம் பகிரங்கமாக வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை ஆதாரத்தோடு கூறி வருகின்றனர். அதில் தற்போது மலையாள திரையுலகில் வெடித்துள்ள போராட்டம் அதிர்வலையை கிளப்பி இருக்கிறது.

நடிகைகள் தூக்கிய போர் கொடி

அதிலும் ஊருக்கு முன் உத்தமன் போல் வேஷம் போடும் அந்த பெரிய நடிகர் முகத்திரை இப்போது கிழிந்துள்ளது. ஏற்கனவே இவர் குறித்து சில சர்ச்சையான விஷயங்கள் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு தான் வருகிறது.

ஆனால் பொது இடத்தில் அவர் செய்த அசிங்கம் இப்போது கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. ஒரு விழாவில் பெரிய ஹீரோயின் மகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது இந்த நடிகர் அதை பார்த்து ஜொள்ளுவிட்டதும் அசிங்கமாக சைகை செய்ததும் இப்போது மீடியாக்களால் கிழித்தெடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர நடிகர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் இப்போது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. இது மட்டுமில்லாமல் இன்னும் யார் யார் சிக்க போகிறார்களோ என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.

பொது இடத்தில் டாப் நடிகர் செய்த வேலை

Next Story

- Advertisement -