ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டரில் இருக்கும் ரகசியம்.. சோசியல் மீடியாவை கலக்கும் தளபதி 67 டைட்டில்

கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 இன்று உச்சகட்ட டென்ஷனை உருவாக்கி இருக்கிறது. அதாவது நேற்று இந்தப் படத்தின் பூஜை குறித்த ஒரு வீடியோ வெளியாகி பலரையும் மிரள வைத்தது. அதை தொடர்ந்து இன்று இப்படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகள் பற்றிய அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்துடன் பட குழு அட்டகாசமான ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் தன் இரு கைகளையும் உயர்த்தியபடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த போஸ்டர் முழுவதும் ரத்தம் தெறிக்கும் வகையில் இருக்கிறது.

Also read: பிரீ பிசினஸில் கலக்கும் தளபதின்னு சொல்றாங்க அது உண்மை இல்லை.. எதிர்பார்ப்பை எகிற வைத்தது இவர் மட்டும்தான்

மேலும் அது கையால் தத்ரூபமாக வரைந்தது போன்று அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதனால் படு உற்சாகமான விஜய் ரசிகர்கள் தற்போது டைட்டிலை எதிர்பார்த்து உச்சக்கட்ட டென்ஷனோடு காத்திருக்கின்றனர்.

ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டர்

thalapathy67- poster
thalapathy67- poster

அது மட்டுமல்லாமல் படத்தின் டைட்டில் இதுவாகத்தான் இருக்கும் என்று தங்கள் கணிப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பு நிறுவனம் டைட்டில் குறித்த ஒரு சிறு குறிப்பையும் நாசுக்காக வெளியிட்டுள்ளது. அதாவது நாங்க சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம் என்ற வரியுடன் தளபதி 67 டைட்டில் லோடிங் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Also read: தளபதி-67 பூஜையில் விஜய்யுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தை யார் தெரியுமா.? பிரபல காமெடியன் மகளாம்

அதில் 10 சிறு கட்டங்களும் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போதே படத்தின் தலைப்பு 10 எழுத்தில் தான் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை வைத்து ரசிகர்கள் ஒரு யூகமாக சில தலைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால் நிச்சயம் டைட்டில் ஆங்கிலத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் இப்படத்திற்கு தளபதி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அந்த வார்த்தை ஆங்கிலத்தில் எழுதும் போது 10 எழுத்துக்களை கொண்டதாக இருக்கிறது. மேலும் ரத்தம், கில்லர், Eagle, கருடன், குருதி, Killer, SCORPION, GHOST ஆகிய பெயர்களும் சோசியல் மீடியாவில் உலா வருகின்றது. எது எப்படி இருந்தாலும் நாளை வர போகும் டைட்டிலுடன் சேர்ந்த புரோமோ வீடியோ நிச்சயம் எதிர்பார்க்காத அளவில் இருக்கும் என்பது மட்டும் உண்மை.

Also read: தளபதி 67 பட பூஜைக்கு வந்த முக்கிய 2 இயக்குனர்கள்.. அடுத்த பட கூட்டணிக்கு போட்ட அடித்தளம்

- Advertisement -spot_img

Trending News