Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-cinemapettai-actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் அடையாளமாக இருந்த விஷயம்.. நெருக்கடி கொடுத்து முடிவு கட்டிய பிரபலம்

சூப்பர் ஸ்டாருக்கு இன்று வரை அடையாளமாக இருக்கும் ஒரு விஷயம் பிரபலம் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக முடிவுக்கு வந்தது.

சூப்பர் ஸ்டாருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் எதை செய்தாலும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களும் உண்டு. அப்படி அவருக்கு இன்று வரை அடையாளமாக இருக்கும் ஒரு விஷயம் பிரபலம் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக முடிவுக்கு வந்தது.

அதாவது தமிழ் சினிமா இப்போது உலக தரத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது. பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக நம்ம ஊரு இயக்குனர்களும் புது டெக்னாலஜிகளை பயன்படுத்தி பலரையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு படத்திற்கும் புதுமையான விஷயங்களும் கொண்டு வரப்படுகிறது.

Also read: பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினி.. காட்டமாக விமர்சித்த பூ நடிகை, விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை

ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான விஷயங்களும், கலாச்சாரங்களும் தான் பின்பற்றப்பட்டு வந்தது. உதாரணத்திற்கு ஹீரோ புகை பிடிப்பதை ஒரு ஸ்டைலாகவே காட்டி வந்தனர். அதிலும் சூப்பர் ஸ்டாருக்கு அதுதான் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பரட்டை தலையுடன் அவர் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு வாயில் கவ்வி பிடிப்பார்.

இந்த ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்களும் கிடையாது. அதை கொண்டாடாதவர்களும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் சிறு குழந்தைகள் கூட இந்த ஸ்டைலை செய்து பார்த்த கதையும் உண்டு. அதையே மற்ற ஹீரோக்களும் பயன்படுத்த தொடங்கினார்கள். அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய் மது அருந்தும் காட்சிகளையும் சினிமாவில் கொண்டுவர ஆரம்பித்தனர்.

Also read: பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

இது அடுத்த தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்ற நோக்கில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒரு போராட்டத்தையே நடத்தினார். அதைத்தொடர்ந்து சினிமாக்காரர்களுக்கு கடும் நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. அதில் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட பிரபலங்களும் படங்களில் அந்த காட்சிகளை வைப்பதை தவிர்க்க ஆரம்பித்தனர்.

தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் மட்டுமே அதுபோன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. அதிலும் புகை பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு என்ற வாசகமும் அந்தக் காட்சி வரும்போது இடம்பெறுகிறது. இது உண்மையில் ஆரோக்கியமான விஷயம் தான். அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு அடையாளமாக இருந்த விஷயத்தையே ராமதாஸ் மாற்றி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

Also read: யானை இல்லை குதிரை என சூப்பர் ஸ்டார் நிரூபித்த படம்.. தொடர் தோல்விகளுக்கு பின் ரஜினியை தூக்கி நிறுத்திய இயக்குனர்

Continue Reading
To Top