ஆசிரியை கார் ஏற்றி கொன்ற இளையராஜா புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அண்ணா நகரில் ஆசிரியை ஒருவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆசிரியை நிவேதா, சென்னை அண்ணா நகரில் கார் விபத்தில் சிக்கி பலியானார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், நிவேதாவுடன் தொடர்பிலிருந்த இளையராஜா, கணபதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நிவேதாவை கார் ஏற்றி கொன்றதாக இளையராஜா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளையாராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments

comments

More Cinema News: