fbpx
Connect with us

Cinemapettai

கொரோனாவை கட்டுப்படுத்தி சாதனை புரிந்த எடப்பாடியார்.. மகிழ்ச்சியில் திளைக்கும் தமிழக மக்கள்!

India | இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்தி சாதனை புரிந்த எடப்பாடியார்.. மகிழ்ச்சியில் திளைக்கும் தமிழக மக்கள்!

பொதுவாக எந்த ஒரு மாநிலத்தில் 5 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என்பது உலக ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பாகும்.

எனவே தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின்  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் வெறும் 4.95% ஆகும்.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னவெனில் தற்போதைய அரசின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வகுத்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தியதே காரணமாகும்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்களை மக்கள் கூடும் இடங்களில் அமைத்து, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோயாளிகளை துரிதமாக கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை  சிறப்பாக வழங்கியது எடப்பாடியார் அரசு.

அதேபோல் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

மேலும் தமிழகம்  இந்தியாவிலேயே  RT-PCR பரிசோதனை செய்வதில், முன்னிலை வகிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனை என்ற விருதை பெற்றது மட்டுமல்லாமல்  90% நுரையீரல் பாதிப்புடைந்தவர்களையும் கொரோனாவிலிருந்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை.

எனவே இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா அதிவிரைவில் ஒழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

edappadi-palaniswami

edappadi-palaniswami

Continue Reading
To Top