செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அனுஷ்காவுடன் கிசு கிசுக்கப்பட்ட இயக்குனருக்கு நடந்த திடீர் கல்யாணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Anushka Shetty: 43 வயது ஆகியும் அழகு பதுமையாக இருக்கும் அனுஷ்கா, ரசிகர்களின் மொத்த அன்பையும் பெற்றிருக்கிறார். நடிப்புன்னு வந்துட்டா எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க தயங்க மாட்டார். அதனாலேயே அனுஷ்கா நடிக்கும் படங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பார். அப்படி இவர் நடித்த கேரக்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறது.

ஆனாலும் அவ்வப்போது அனுஷ்கா பற்றிய சில சர்ச்சையான விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் 43 வயது ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருப்பதால் தான். அதிலும் பாகுபலி படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடந்த பிறகு இவர்கள் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்குள் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று இருவர் தரப்பில் இருந்து கூறினார்கள்.

vanam movie director
vanam movie director

அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடி என்பவரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும் இவர்கள் தான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக க்ரிஷ் ஜகர்லமுடிக்கு இன்று திடீர் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது.

vanam movie director (1)
vanam movie director (1)

அதாவது க்ரிஷ் ஜகர்லமுடி, டாக்டர் ப்ரீத்தி சல்லா என்பவரை இன்று ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கும் விதமாக இவர்கள் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு திருமண பந்தத்தை உறுதி செய்து விட்டார்கள்.

krish
krish

தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் அனுஷ்கா பற்றி அந்த கிசு கிசுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் க்ரிஷ் ஜகர்லமுடி கிட்டதட்ட 10 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். தமிழில் வானம் படத்தை இயக்கியதன் மூலம் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காதி மற்றும் ஹரிஹர வீரமல்லூர் படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

- Advertisement -

Trending News