Vijay_Vadivelu

இதற்கு முன்பு விஜய் -வடிவேலு இணைந்து காமெடி செய்த சச்சின், காவலன், சுறா உள்பட பல படங்களில் விஜய்-வடிவேலுவின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி யிருந்தது. அதனால்தான் அதன்பிறகு தான் நடித்த புலி, தெறி படங்களில்கூட வடிவேலு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜய். ஆனால், அந்த நேரத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிற முடிவில் வடிவேலு இருந்ததால் அந்த முயற்சி நடக்கவில்லை. முக்கியமாக தெறி படத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்தார்.

ஆனால் தற்போது வடிவேலு மீண்டும் காமெடியனாகியிருப்பதை அடுத்து, விஜய்யின் 61வது படத்தில் அவரை புக் பண்ணியுள்ள அட்லி, வடிவேலுவிடம் 20 நாட்கள் கால்சீட் வாங்கியிருக்கிறார். அதாவது, இதுவரை அப்பா விஜய் நடித்த காட்சிகளை செட் போட்டு படமாக்கியவர், அடுத்தபடியாக இரண்டு மகன் விஜய்களின் காட்சிகளை படமாக்குகிறார். இதில் ஒரு விஜய்யின் நண்பனாக வடிவேலுவும், இன்னொரு விஜய்யின் நண்பனாக சத்யனும் நடிக்கிறார்கள்.

இதில், வடிவேலுவுடன் நடிக்கும் விஜய்யின் கேரக்டர் செம காமெடியாக சித்தரிக்கப்பட்டி ருக்கிறதாம். அதாவது சிலரை கடத்த திட்டமிடும் அவர்கள், சம்பந்தமில்லாத நபர்களை கடத்திச் சென்று விட்டு வம்பில் மாட்டிக்கொள்வது போன்ற ஒரு காமெடி ட்ராக் இந்த படத்தில் உள்ளதாம். அதில் இடம்பெறும் காமெடி காட்சிகள், இதற்கு முன்பு விஜய்-வடிவேலு நடித்த படங்களின் காமெடி காட்சிகளை மிஞ்சும் வகையில் கலக்கலான காமெடி காட்சிகளில் உருவாக்கியிருக்கிறாராம் டைரக்டர் அட்லி.