fbpx
Connect with us

விவேகம் கதை என்னுடையது,கதறும் இயக்குனர், தயாரிப்பாளர்..!!!

News / செய்திகள்

விவேகம் கதை என்னுடையது,கதறும் இயக்குனர், தயாரிப்பாளர்..!!!

லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் சந்திரசேகர் ‘விவேகம்’ படத்தின் கதை அவருடையது என குற்றம் சாட்டி அவருடைய முகப் புத்தகத்தில் நீண்ட ஒரு பதிவை எழுதியுள்ளார்.
‘ஐ – நா’ என்ற பெயரில் அவர் தயாரித்து, இயக்க வைத்திருந்த படத்தின் கதை 60 சதவீதம் விவேகம் படத்தில் வந்துவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அவருடைய முகப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிவின் சுருக்கம்.
“விவேகம் படத்தின் ஒரிஜனல் கதை என்னுடைய ஐ – நா படத்தினுடையது. 2013ம் ஆண்டு இந்தப் படத்தின் கதையை அஜித்திற்கு மிக நெருக்கமான ஒருவரிடம் கொடுத்து பிரசன்டேஷனும் அளித்தேன்.
மூன்று வாரங்கள் கழித்து அவர் என்னிடம் அஜித் புதிய இயக்குனர்களுடன் பணிபுரிய மாட்டார், அதனால் அவரிடம் கதை சொல்ல முடியாது என்று சொன்னார்.


விவேகம் படத்தைப் பார்த்த பிறகு அதில் நான் விளக்கிச் சொன்ன சீன்களுடன் 60 சதவீதக் காட்சிகள் இருந்தது.
Ravindar Chandrasekaran
நான் அஜித் சாரிடமோ, இயக்குனர் சிவா சாரிடமோ இது பற்றி உறுதியாகவும் ஒப்புக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் நான் அவர்களை இதுவரைச் சந்தித்துப் பேசவும் இல்லை தொடர்பு கொள்ளவும் இல்லை. அவர்கள் மூலம் இந்தக் கதை திருடப்படவில்லை. அஜித்திற்கு நெருக்கமான அவர்தான் என்னுடன் இதற்காக பயணித்தார், விவேகம் படம் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்தது. படத்தின் ஆரம்பத்தில் இது அனைத்தும் கற்பனையே உண்மையானது அல்ல என சொல்லியிருப்பது சுவாரசியமானது. ஆனால், நான் இது பற்றி ஆராய்ச்சி செய்து உண்மை நிகழ்வுகளுடன் தமிழ் சினிமாவுக்குத் தக்கபடி மிகவும் விரிவாக எழுதி, அஜித் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இந்தக் கதையை உருவாக்கினேன்.

இப்படத்தின் கதையைத் தெரிந்த கலைஞர்கள் என்னை அழைத்து கதை திருடப்பட்டது குறித்து கேட்கிறார்கள்.
இப்படி ஒரு கதை திருடப்படும் போது என்ன ஒரு வலி இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்கிறேன். இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.மூன்று படங்களைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு துரோகம் ஏற்பட்டுள்ளது.இதை நான் ஒரு சீப்பான விளம்பரத்திற்காகவோ, வேறு எந்த ஒரு எதிர்பார்ப்புக்காகவோ சொல்லவில்லை.ஒரு எளிமையான மன்னிப்பை மட்டுமே நான் கேட்கிறேன், அதுவும் பொதுவெளியில் அல்ல. தலயுடன் இருப்பதால் இன்னொரு முறை இந்தத் தவறு நடக்கக் கூடாது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நானும் தல ரசிகன்தான். இந்தக் கதை அவருக்காகவே சிறப்பாக வடிவமைத்து எழுதப்பட்ட ஒன்று.இங்கு விவேகம் படத்தின் தரத்தைப் பற்றி நான் கமெண்ட் செய்ய வரவில்லை. சிவா சாரிடமிருந்து ஒரு அற்புதமான படைப்பாக வந்திருக்கிறது.என்னுடைய ‘ஐ நா’ படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. அதற்கு தயாரிப்புக்கு முந்தைய பணிகளுக்கு பெரும் நாட்கள் தேவைப்படுகிறது.
பொதுவெளியில் தக்க ஆதாரங்களுடன் இதைக் கொண்டு செல்வதற்கு முன்பு அந்த நபர் என்னை எவ்வளவு சீக்கிரத்தில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்கிறாரோ அதை நான் பாராட்டுவேன்.தல அஜித் சார் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் என் உணர்வை மக்கள் முன் வெளிப்படுத்த விருப்பமில்லை. வலியையும் மீறி, எதிர்காலத்தில் மக்கள் மறைந்து கொண்டு யார் இந்த விவகாரங்கள் குறித்து கேட்பது என்று அழக் கூடாது.என் பார்வையும் அக்கறையும் உண்மையானது என்று நினைக்கும் மக்கள் உண்மையாக இருந்தால். நியாயத்திற்காக எனக்கு உதவுங்கள்.
உங்களைப் போலவே நானும் உணர்ச்சியுள்ள ஒருவனாக தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் கனவுகளுடன் இருக்கும் ஒரு இயக்குனராகவும் இருக்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
I Na – Musical Teaser
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ‘நளனும் நந்தினியும், சுட்ட கதை’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது ‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவின் நாயகனாக நடிக்கும் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
‘தில்லு முல்லு’ படத்தின் இசை வெளியீட்டையும், சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றி விழாவையும் சுவிட்சர்லாந்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் நடத்தியவர்.
‘விவேகம்’ படத்தின் இந்த கதைத் திருட்டு விவகாரம் குறித்து, ” சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top